search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை துவங்கியது
    X

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை துவங்கியது

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. #MotoG7Power #Smartphone



    இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமான மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் 19:9 பேனல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் 60 மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது.



    மோட்டோ ஜி7 பவர் சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1570x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் LTPS LCD 19:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12um பிக்சல்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் டர்போ சார்ஜிங்

    இந்தியாவில் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், விரைவில் இது ப்ளிப்கார்ட் தளத்திலும் கிடைக்கும் என தெரிகிறது.
    Next Story
    ×