search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ப்ளிப்கார்ட்டில் வெளியான கேலக்ஸி எஸ்10 டீசர்
    X

    ப்ளிப்கார்ட்டில் வெளியான கேலக்ஸி எஸ்10 டீசர்

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியானது. #GalaxyS10 #Flipkart



    சாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீட்டிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் பதிவிடப்பட்டது. கேலக்ஸி எஸ்10 அறிமுக நிகழ்வின் இந்திய நேரத்துடன் ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு பேனர் வெளியிடப்பட்டிருந்தது. இத்துடன் கேலக்ஸி எஸ்10 அறிமுக நிகழ்வுக்கான நோட்டிஃபை பட்டனும் இடம்பெற்றிருந்தது.

    புதிய டீசர் வெளியாகியிருப்பதையொட்டி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சர்வதேச வெளியீட்டுடன் அறிமுகமாகும் என்பதை உணர்த்துகிறது. இத்துடன் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் இயர்போன் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    கேலக்ஸி அன்பேக்டு 2019 விழா சான்பிரான்சிஸ்கோ நகரில் பிப்ரவரி 20, காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி பிப்ரவரி 21, நள்ளிரவு 12.30 மணி) துவங்குகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுக நிகழ்வுக்கான பேனரில் விழா அழைப்பிதழும் இடம்பெற்றிருந்தது.

    ப்ளிப்கார்ட்டில் மட்டும் விளம்பரப்படுத்தப்பட்டு இருப்பதால், கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சர்வதேச சந்தையில் அறிமுகமானதும் இந்தியாவில் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மார்ச் 8 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட சில சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. 

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போன்களுக்கான முன்பதிவுகள் பிப்ரவரி 21 ஆம் தேதி துவங்கும் என கூறப்பட்டது. இம்முறை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10இ, கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×