என் மலர்

  தொழில்நுட்பம்

  கோடிகளில் லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ
  X

  கோடிகளில் லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி ஜியோ மொத்த வருவாய் ரூ.831 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. #RelianceJio  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன் படி இந்த காலாண்டில் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்துள்ளது.

  முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 12.4 சதவிகிதம் அதிகம். வருடாந்திர அடிப்படையில் 50.9 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. மூன்றாவது காலாண்டை பொருத்த வரை ஜியோவின் நிகர லாபம் ரூ.831 கோடியாகும். இது காலாண்டு வாக்கில் 22.1 சதவிகிதமும், வருடாந்திர அடிப்படையில் 65 சதவிகிதம் அதிகம் ஆகும்.

  முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ஜியோவின் சேவை வருவாய் மட்டும் 12.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.12,252 கோடி ஈட்டியிருக்கிறது. டிசம்பர் 31, 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டு வரை ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25.23 கோடியாக இருந்தது.  - ரிலையன்ஸ் ஜியோ ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாய் - மாதம் ரூ.130

  - ஜியோ வாடிக்கையாளர்களின் மொத்த வயர்லெஸ் டேட்டா - 864 கோடி ஜி.பி.

  - ஜியோ வாடிக்கையாளர்களின் வாய்ஸ் கால் பயன்பாடு - தினமும் 63,406 கோடி நிமிடங்கள், மாதம் ஒரு வாடிக்கையாளர் 794 நிமிடங்கள்

  - ஜியோ வாடிக்கையாளர்களின் வீடியோ பயன்பாடு - மாதம் 460 கோடி மணி நேரம்

  - ஜியோ வாடிக்கையாளர்களின் மாதாந்திர டேட்டா பயன்பாடு - 10.8 ஜி.பி. சராசரி

  ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி துவங்கியது. இதைத் தொடர்ந்து நாடு முழுக்க சுமார் 1400 நகரங்களில் இருந்து ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
  Next Story
  ×