search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப் ஸ்டோர் மூலம் 122 கோடி டாலர்கள் வருவாய் ஈட்டிய ஆப்பிள்
    X

    ஆப் ஸ்டோர் மூலம் 122 கோடி டாலர்கள் வருவாய் ஈட்டிய ஆப்பிள்

    உலகம் முழுக்க பண்டிகை காலத்தில் மட்டும் ஆப் ஸ்டோர் மூலம் ஆப்பிள் நிறுவனம் சுமார் 122 கோடி டாலர்கள் வருவாய் ஈட்டியிருக்கிறது. #Apple #AppStore



    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோர் வியாபாரத்தில் பண்டிகை காலத்தில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. 2018 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் உலகம் முழுக்க ஆப் ஸ்டோர் வாடிக்கையாளர்கள் 122 கோடி டாலர்களுக்கு பொருட்களை வாங்கியிருக்கின்றனர்.

    2019 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் மட்டும் வாடிக்கையாளர்கள் சுமார் 32.2 கோடி டாலர்கள் மதிப்பிலான பொருட்களை வாங்கியிருக்கின்றனர். அந்த வகையில் ஆப்பிள் வரலாற்றில் ஒரே நாளில் அதிகளவு விற்பனையை அந்நிறுவனம் பதிவு செய்திருக்கிறது.

    ஆப்பிள் சேவைகளுக்கான வருவாயில் ஆப் ஸ்டோர் இதுவரை இல்லாத சாதனையை பதிவு செய்திருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஆப் ஸ்டோர், ஆப்பிள் மியூசிக், கிளவுட் சேவைகள், ஆப்பிள் பே மற்றும் ஆப் ஸ்டோர் சர்ச் என பல்வேறு பிரிவுகளில் ஆப்பிள் சேவைகள் புதிய சாதனையை படைத்திருக்கின்றன.



    ஆப் டவுன்லோடு மற்றும் சந்தா செலுத்தி பயன்படுத்தக்கூடிய செயலிகளில் கேமிங் மற்றும் சுய பாதுகாப்பு சார்ந்த செயலிகள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. சர்வதேச அளவில் பப்ஜி, ஃபோர்ட்னைட் போன்ற கேம்கள் அதிக பிரபலமாக இருந்துள்ளன. 

    இதுதவிர பண்டிகை காலக்கட்டத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் பிரால் ஸ்டார்ஸ், ஆஸ்ஃபால்ட் 9, மான்ஸ்டர் ஸ்டிரைக் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன. உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த செயலிகள் புத்தாண்டு துவக்க நாட்களில் அதிக டவுன்லோடுகளை பெற்று இருக்கின்றன.
    Next Story
    ×