search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வலைத்தளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
    X

    வலைத்தளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Samsung #smartphone



    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி எம் சீரிசில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் எஃப்.சி.சி. வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.

    கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனுடன், கேலக்ஸி எம்20, கேலக்ஸி எம்30 மற்றும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகும் என தெரிகிறது. இதேபோன்று சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ சீரிசில் மாற்றங்களை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எஃப்.சி.சி. வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.02 இன்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 சிப்செட், 3 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இத்துடன் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 4.2, கைரேகை சென்சார், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம். சாம்சங்கின் புதிய கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் புளு மற்றும் டார்க் கிரே என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சாம்சங் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி வி ரக டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று சாம்சங் நிறுவனம் அதிகபட்சம் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    Next Story
    ×