search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அறிமுக சலுகைகளுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் விற்பனை இந்தியாவில் துவங்கியது
    X

    அறிமுக சலுகைகளுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் விற்பனை இந்தியாவில் துவங்கியது

    ஒன்பிளஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியது. #OnePlus6TMcLaren



    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனிற்கு இதுவரை முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில், அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் வலைதளத்தில் விற்பனை துவங்கியது.

    புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனில் மெக்லாரென் பிராண்டு லோகோ, சக்திவாயந்த சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய மெக்லாரென் எடிஷனில் 10 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 30 வாட் ராப் சார்ஜ் 30 வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய ராப் சார்ஜ் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை 20 நிமிடங்களில் ஒரு நாள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் 50% வரை சார்ஜ் செய்துவிடும். புதிய ஸ்மார்ட்போன் மற்றும் சார்ஜர் என இரண்டிலும் அந்நிறுவனம் இன்டகிரேட்டெட் சர்கியூட்களை வழங்கி இருக்கிறது.

    மெக்லாரென் எடிஷன் என்பதால் ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மெக்லாரெனின் கார்பன் ஃபைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பெட்டியில் இருநிறுவனங்களின் வரலாற்றை கொண்டாடும் சிறிய புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்:

    - 6.41 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 10 ஜி.பி. ரேம்
    - 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, 1/2.6″  சோனி IMX519 சென்சார், 1.22μm பிக்சல், OIS, EIS
    - 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், f/1.7, 1.0μm பிக்சல்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX 371 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ராப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் விலை ரூ.50,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை டிசம்பர் 15 முதல் டிசம்பர் 24ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மாத தவணை முறையில் வாங்குவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.1,500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    இதுதவிர அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் ஒன்பிளஸ் பிரத்யேக ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்குவோர் பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.3000 வரை கூடுதல் தள்ளுபடியும், இதர சாதனங்களை எக்சேஞ்ச் செய்வோர் ரூ.2,000 வரை தள்ளுபடி பெற முடியும். #OnePlus6TMcLaren #smartphone
    Next Story
    ×