search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு
    X

    இந்தியாவில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு

    சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டள்ளது. #POCOF1

     

    சியோமியின் துணை பிரான்டு போகோ தனது முதல் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.20,999 எனும் துவக்க விலையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் அறிமுகமானது. 

    ஆன்லைன் சிறப்பு விற்பனைகளில் பல்வேறு சலுகைகளில் விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்சமயம் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனிற்கு நிரந்தர விலை குறைப்பை போகோ அறிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் ஏழு லட்சம் யூனிட்கள் விற்பனையை கொண்டாடும் வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியன்ட் தற்சமயம் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் புது விலையில் பிளிப்கார்ட் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கிடைக்கிறது.



    போகோ எஃப்1 புது விலை பட்டியல்:

    போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.19,999 (ரூ.1,000 தள்ளுபடி)
    போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.22,999 (ரூ.1,000 தள்ளுபடி)
    போகோ எஃப்1 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.27,999 (ரூ.1,000 தள்ளுபடி)
    போகோ எஃப்1 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் விலை ரூ.28,999 (ரூ.1,000 தள்ளுபடி)



    போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் 
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    போகோ எஃப்1 ஸ்மார்ட்போனிற்கு சமீபத்தில் ஆன்ட்ராய்டு 9.0 பை ஓபன் பீட்டா அப்டேட் வழங்கப்பட்டது. மற்றொரு அப்டேட் இந்த ஸ்மார்ட்போனில் 960fps ஸ்லோ-மோஷன் வீடியோ பதிவு செய்யும் வசதியை வழங்கியது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில்  120fps மற்றும் 240fps ஸ்லோ-மோஷன் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. #POCOF1 #smartphone
    Next Story
    ×