என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் வெளியானது
Byமாலை மலர்7 Dec 2018 3:17 PM IST (Updated: 7 Dec 2018 3:17 PM IST)
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் லிமிட்டெட் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் வெளியானது. #GalaxyNote9 #GalaxyS9Plus
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் லிமிட்டெட் எடிஷனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆல்பைன் வைட் நிறத்திலும், கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரேடியன்ட் போலாரிஸ் புளு நிறத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புது ஆல்பைன் வைட் நிறம் தவிர ஓசன் புளு, மிட்நைட் பிளாக், மெட்டாலிக் காப்பர் மற்றும் லாவென்டர் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
இதேபோன்று கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரேடியன்ட் போலாரிஸ் புளு நிறம் தவிர மிட்நைட் பிளாக், கோரல் புளு, லிலாக் பர்ப்பிள், சன்ரைஸ் கோல்டு, பர்கன்டி ரெட் உள்ளிட்ட நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆல்பைன் வைட் எடிஷன் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ.67,900 என்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் போலாரிஸ் புளு நிற எடிஷன் விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்களும் சாம்சங் ஆன்லைன் வலைதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆன்லைன் வலைதளங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் தளங்களில் டிசம்பர் 10ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ.6000 வரை கேஷ்பேக், பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் ரூ.9,000 வரை தள்ளுபடி பெற முடியும். #GalaxyNote9 #GalaxyS9Plus
Next Story
×