என் மலர்
தொழில்நுட்பம்

அமேசான் பிழையால் இந்திய பயனர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்
அமேசான் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அதன் பயனர்களின் விவரங்களை அம்பலப்படுத்திய நிலையில், இந்திய பயனர்களும் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Amazon
அமேசான் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனர் விவரங்கள் லீக் ஆன விவகாரத்தில் இந்திய பயனர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பியா, அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் அமேசான் சேவையை பயன்படுத்துவோரின் விவரங்கள் அம்பலமானதாக அமேசான் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வழங்கப்பட்டு இருந்தது. மற்ற நாட்டு பயனர்களை போன்றே இந்திய பயனர்களும் தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனர்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவை அந்நிறுவன வலைதளத்தில் பதிவானது. இந்த கோளாறில் இந்தியா உள்பட உலகம் முழுக்க எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

உலகளவில் பயனர் விவரங்கள் அம்பலமான தொழில்நுட்ப கோளாறில் இந்திய வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து அமேசான இந்தியா எவ்வித தகவலும் வழங்கவில்லை. “தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம்,” என்று மட்டும் அமேசான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க பல அமேசான் வாடிக்கையாளர்கள் அமேசானிடம் இருந்து தங்களுக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் தொழில்நுட்ப கோளாறு பற்றிய விவரங்களும், வாடிக்கையாளர்கள் தங்களது கடவுச்சொற்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.
பாதுகாப்பு வல்லுநர்களின் படி மின்னஞ்சல் முகவரிகள் அம்பலமாகச் செய்யும் தாக்குதல்கள் மால்வேர் மூலம் அரங்கேற்றப்படுகிறது என தெரிவித்துள்ளனர். இதில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் சாதனங்களில் ஆன்லைன் மற்றும் வன்பொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
Next Story