search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பது மாதங்களில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக டி.வி.க்களை விற்பனை செய்த சியோமி
    X

    ஒன்பது மாதங்களில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக டி.வி.க்களை விற்பனை செய்த சியோமி

    சியோமி நிறுவனத்தின் Mi எல்.இ.டி. டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகமான ஒன்பது மாதங்களில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியிருக்கிறது. #Xiaomi #MiTV



    இந்தியாவில் சியோமி நிறுவனம் ஒன்பது மாதத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக Mi எல்.இ.டி. டி.வி. மாடல்கள் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. பத்து லட்சம் விற்பனையில் நான்கு Mi டி.வி. வேரியன்ட்களும் அடங்கும். இத்தகைய மைல்கல் விற்பனை சந்தையில் முதல்முறை என்பதோடு, சியோமி இந்தியாவிற்கு முக்கிய மைல்கல் ஆக இருக்கிறது.

    2018 இரண்டாவது காலாண்டில் சியோமி நிறுவனம் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. பிரான்டாக உருவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஐ.டி.சி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவல் கிடைத்திருக்கிறது. ஆன்லைன் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களின் மூலம் சியோமி நிறுவனம் கடந்த ஆறு மாதங்களில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்திருக்கிறது.

    இதைத் தொடர்ந்து அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெற்ற தீபாவளி விற்பனையில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களை விற்பனை செய்திருக்கிறது. அந்த வகையில் ஒரே மாதத்திற்குள் சியோமி நிறுவனம் நான்கு லட்சத்திற்கும் அதிகமான டி.வி.க்களை விற்பனை செய்துள்ளது.

    இந்தியாவில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்திய சந்தையில் ஆன்லைனில் அதிகம் விரும்பப்பப்பட்ட டி.வி. மாடலாக இருக்கிறது. Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ 32 இன்ச்  மாடல் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக விருப்பங்களை பெற்ற ஆன்லைனில் பிரபல டி.வி. மாடலாக இருக்கிறது.
    Next Story
    ×