search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பட்ஜெட் விலையில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    பட்ஜெட் விலையில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    ரியல்மி ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Realme2Pro



    ஒப்போ நிறுவனத்தின் துணை பிரான்டு ரியல்மி ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. 

    6.3 இன்ச் FHD டியூடிராப் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே நாட்ச், 90.8% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 660 AIE பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.

    இத்துடன் 16 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.7 அப்ரேச்சர், ஏ.ஐ. அம்சம், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சம் கொண்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 2 ப்ரோ மாடலில் 15-லேயர் லேமினேட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    ரியல்மி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 1080x2340 பிக்சல் 19.5:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, சோனி IMX398 சென்சார், டூயல் பிக்சல் ஃபோக்கஸ், EIS
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐஸ் லேக், பிளாக் சீ மற்றும் புளு ஓசன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,990 என்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,990 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 11-ம் தேதி முதல் கிடைக்கும்.
    Next Story
    ×