என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ஐபோன் மாடல்கள் விலை குறைந்து ரூ.29,900 விலையில் விற்பனை
Byமாலை மலர்14 Sept 2018 12:36 PM IST (Updated: 14 Sept 2018 12:36 PM IST)
ஆப்பிள் நிறுவனம் 2018 ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்து, ஏற்கனவே விற்பனை செய்யும் ஐபோன்களின் விலையை குறைத்துள்ளது. #iPhoneX
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்து, நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க விரும்புவோர் ஆவலுடன் எதிர்பார்த்த தகவலை ஆப்பிள் அறிவித்தது. மூன்று புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்ததுடன் ஆப்பிள் ஏற்கனவே விற்பனை செய்யும் ஐபோன் X உள்ளிட்ட மால்களின் விலையை குறைப்பதாக அறிவித்தது.
சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் ஐபோன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஐபோன் 6எஸ் 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.29,900 முதல் துவங்குகிறது. ஐபோன் 6எஸ் பிளஸ் மாடல் ரூ.34,900 முதல் துவங்குகிறது. ஐபோன் மாடல்களின் புதிய விலை ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஐபோன் எஸ்.இ., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் X உள்ளிட்ட மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் எஸ்.இ. விற்பனை மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய விலையை பொருத்த வரை ஐபோன் X மாடலின் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.91,900 என்றும் 256 ஜிபி வேரியன்ட் விலை ரூ.1,06,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஐபோன் X விலை ரூ.95,390 என்றும் ரூ.1,08,930 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இத்துடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 64 ஜிபி ஐபோன் 8 மாடல் ரூ.59,900 என்றும் 256 ஜிபி வேரியன்ட் ரூ.74,900 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல்கள் ரூ.67,940 மற்றும் ரூ.81,500 விலையில் விற்பனை செய்யப்பட்டன.
ஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.69,900 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல் ரூ.77,560 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் 256 ஜிபி வேரியன்ட் ரூ.91,110 விலையில் இருந்து ரூ.6,210 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.84,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன் 2016-ம் ஆண்டு அறிமுகமான ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களும் விலை குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 32 ஜிபி ஐபோன் 7 விலை ரூ.39,900 என்றும், 128 ஜிபி மாடல் ரூ.49,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடல்கள் முன்னதாக ரூ.52,370 மற்றும் ரூ.61,560 விலையில் விற்பனை செய்யப்பட்டன.
இதேபோன்று ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி வேரியன்ட் ரூ.49,900 மற்றும் 128 ஜிபி ரூ.59,900 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X