என் மலர்
தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
எல்ஜி நிறுவனத்தின் கியூ சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #lgq7
எல்ஜி நிறுவனத்தின் கியூ7 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்திதுந்த கியூ6 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும்.
மேம்படுத்தப்பட்ட புதிய மாடலில் 5.5 இன்ச் FHD பிளஸ் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750S சிப்செட், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி கியூ7 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் 18:9 FHD பிளஸ் 2160x1080 பிக்சல் ஃபுல்விஷன், 442ppi டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750S பிராசஸர்
- மாலி T860 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹைஃபை ரேடியோ, DTS:X 3D சரவுன்டு
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68) MIL-STD 810G சான்று பெற்றுள்ளது
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி 2.0
- 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய எல்ஜி கியூ7 ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் மற்றும் மொராக்கன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியா முழுக்க செப்டம்பர் 1-ம் தேதி முதல் விற்பனைக்கும் வரும் எல்கி கியூ7 விலை ரூ.15,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Next Story






