search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இதய நோய் வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அப்பல்லோ
    X

    இதய நோய் வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அப்பல்லோ

    நோயாளிகளுக்கு இதய நோய் வரவிருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அப்பல்லோ மருத்துவமனை பயன்படுத்துகிறது. #microsoftai #ApolloHospitals


    உலக தொழில்நுட்ப சந்தையில் வெளிவரும் ஒவ்வொரு சிறுசிறு அறிவிப்பும் என்றோ ஒருநாள் மிகப்பெரும் மாற்றத்தையும், நம்மை வியக்கவைக்கும் வகையிலும் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான சிறு அறிவிப்புகள் இன்று பல்வேறு முக்கிய திருப்பங்களுக்கான செய்திகளாகி வருகின்றன. 

    செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டெட் ரியாலிட்டி போன்ற சொற்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை நமக்கு புதிதாய் இருந்த நிலையில், இன்று நமது ஸ்மார்ட்போன்களில் பல்வேறு வசதிகளை வழங்க இரு தொழில்நுட்பங்களும் அவசியமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கின்றன.

    அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவ துறையில் பல்வேறு புதுமைகளை படைக்க துவங்கியிருக்கிறது. கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சமீபத்திய திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் முக்கிய அங்கமாகியுள்ளன.
     


    இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் இந்தியா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து உடல்நலம் சார்ந்த ஏ.ஐ. நெட்வொர்க் எனும் திட்டத்தின் கீழ் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் புதிய மென்பொருள் இதயம் சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏ.ஐ. சார்ந்த ஏ.பி.ஐ. மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இதய துடிப்பு நோய் வருவதை முன்கூட்டிய கணிக்க முடியும். மைக்ரோசாஃப்ட் அஸ்யூர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மென்பொருள் இந்தியர்களிடம் இதய நோய் வருவதற்கான ஆபத்தை மிகத்துல்லியமாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இருதய நோய் சார்ந்த பல்வேறு மருத்துவ அறிக்கை விவரங்களை இணைத்து இந்த மென்பொருள் இயங்குகிறது. மேலும் பாதிப்பு மிக அதிகமாகவோ, அதிகமாகவோ அல்லது துவக்க நிலையில் உள்ளதா என்பதையும் இந்த மென்பொருள் கணித்து வழங்குகிறது. #microsoftai #ApolloHospitals
    Next Story
    ×