search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மூன்று கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா சென்சார், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung


    சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் 2019 ஸ்மார்ட்போன்களில் பல்வேறு பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா அமைப்பு, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கொரிய வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இரண்டு பிரீமியம் அம்சங்களை வழங்குவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. இந்த மாடலில் டூயல் பிரைமரி கேமரா மற்றும் பின்புற கைரேகை சென்சார் வழங்குகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா சென்சார்களை வழங்க இருப்பதாக தி இன்வெஸ்டர் எனும் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று மூன்று கேமரா அமைப்பு கேலக்ஸி எஸ்10 மாடலிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் முதற்கட்டமாக இந்த அம்சம் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சாம்சங் மூன்று கேமரா செட்டப்: ஒரு லென்ஸ் வேரியபிள் அப்ரேச்சர், ஒரு சூப்பர்-வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே போன்று கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இதே அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. 

    ஆனால் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் குறைந்தளவு திறன் கொண்ட இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #smartphone
    Next Story
    ×