என் மலர்
தொழில்நுட்பம்

ஹூவாய் நோவா 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
ஹூவாய் ஏற்கனவே அறிவித்தப்படி தனது நோவா சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டது. புதிய நோவா 3 ஸ்மார்ட்போன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #HuaweiNova3
ஹூவாய் நிறுவனத்தின் நோவா 3 மற்றும் நோவா 3i ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட நோவா 3 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் 19:5:9 ரக டிஸ்ப்ளே, கிரின் 970 சிப்செட், GPU சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் செயல்திறன் 60% அதிகரித்து 30% பேட்டரியை சேமிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ரியல்டைம் இமேஜ் மற்றும் சவுன்ட் ரெகஃனீஷன் மூலம் 4D கேமிங் அனுபவம், இன்டெலிஜன்ட் கேம் வைப்ரேஷன் வழங்குகிறது. இதனால் 30 வெவ்வேறு சூழல்களில் 10 வகையான அதிர்வுகளை ஏற்படுதத்த முடியும்.
6ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2, 16 எம்பி பிரைமரி கேமரா, 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் செல்ஃபிக்களை எடுக்க 24 எம்பி மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஃபேஸ் அன்லாக் அம்சம் இன்ஃப்ராரெட் லைட் மூலம் முகத்தை இருள் சூழ்ந்த பகுதிகளிலும் கண்டறிந்து கொள்கிறது. இத்துடன் 3D க்யூமோஜி (Qmoji) அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் நோவா 3 சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:5:9 3D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர்
- மாலி-G72 MP12 GPU
- i7 கோ-பிராசஸர், NPU, GPU டர்போ
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, CAF
- 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.8
- 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹூவாய் நோவா 3 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஐரிஸ் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் நோவா 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகைகள்
- அமேசான் தளத்தில் ரூ.1000 கேஷ்பக்
- வட்டியில்லா மாத தவணை முறை
- எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.2000 தள்ளுபடி
- ஜியோ பயனர்களுக்கு ரூ.1200 கேஷ்பேக், 100 ஜிபி கூடுதல் டேட்டா
- ரூ.3300 வவுச்சர்கள்
Next Story






