search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெருமளவு பஞ்சாயத்துக்களில் சிக்கியும் 42 சதவிகித வளர்ச்சியடைந்த ஃபேஸ்புக்

    ஃபேஸ்புக் நிறுவன நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஃபேஸ்புக் இந்த ஆண்டு 42% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #Facebook #socialmedia


    ஃபேஸ்புக் நிறுவன நிதிநிலை அறிக்கை ஜூன் 30, 2018 வரையிலான காலக்கட்டத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஃபேஸ்புக் நிறுவனம் 1323 கோடி டாலர்களை வருவாய் ஈட்டியிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனம் 932 கோடி அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டியிருந்த நிலையில், மொத்தம் 42% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

    ஃபேஸ்புக் மொத்த வருமானத்தில் அதன் விளம்பர பிரிவு மட்டும் 1303 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. ஜூன் 2018, வரையிலான காலக்கட்டத்தில் தினசரி ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 147 கோடியாகும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% அதிகரித்திருக்கிறது. 

    இதேபோன்று மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜூன் 30, 2918 வரையிலான காலக்கட்டத்தில் 223 கோடி ஆகும். 2018 இரண்டாவது காலாண்டில் மட்டும் ஃபேஸ்புக் மொபைல் விளம்பர பிரிவு வருவாய் அந்நிறுவன விளம்பர வருவாயில் 91% ஆகும். இது 2017 இரண்டாவது காலாண்டில் 87% ஆக இருந்தது.

    ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் வியாபாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மக்களை ஒன்றிணைப்பதில் தொடர்ந்து அர்த்தமுள்ள வழிகளை கட்டமைப்பது மற்றும் மக்களை பாதுகாப்பாக வைப்பதில் தொடர்ந்து முதலீடு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார்.

    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த நிலையிலும் வியாபாரத்தில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
    Next Story
    ×