search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED டிஸ்ப்ளே தயாரிக்கும் சீன நிறுவனம்

    ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு OLED பேனல்களை இந்த சீன நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple #iPhoneX



    ஆப்பிள் நிறுவன ஐபோன் X மாடலுக்கு சாம்சங் நிறுவனம் OLED பேனல்களை வழங்கி வருகிறது. OLED பேனல்களுக்கு சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நம்பியிருக்கும் நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் OLED பேனல்களை சீன நிறுவனத்திடம் இருந்து வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உற்பத்தி திறனை மேம்படுத்துவதன் விளைவாக சீன நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED பேனல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவின் BOE தொழில்நுட்ப குழுமம் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன் மாடல்களுக்கு OLED பேனல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே சீனாவின் BOE நிறுவனம் ஆப்பிள் நிறுவன ஐபேட் மற்றும் மேக்புக் சாதனங்களுக்கு பெரிய LCD ஸ்கிரீன்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்துக்கான விநியோகத்தை பெய்ஜிங் நகர அரசு மூலம் கட்டுப்படுத்தப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்துக்கு உபகரணம் வழங்கும் ஒற்றை சீன நிறுவனமாக இருக்கிறது.


    கோப்பு படம்

    புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஆப்பிள் நிறுவனம் மற்றும் சீன அரசாங்கத்திடையேயான உறவு மேம்படும் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளே-ஸ்கிரீன் உற்பத்தியில் BOE நிறுவனத்தை பொருத்த வரை தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடனான போட்டியில் சீனாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறது. 

    இதேபோன்று சீன நிறுவனம் மட்டுமின்றி எல்ஜி நிறுவனமும் சுமார் 20 முதல் 40 லட்சம் OLED பேனல்களை ஆப்பிள் 6.5 இன்ச் ஐபோன் X பிளஸ் மாடலுக்கு விநியோகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதேபோன்று சாம்சங் நிறுவனமும் ஐபோன்களுக்கு OLED பேனல்களை விநியோகம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

    வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

    ஆப்பிள் எதிர்பார்க்கும் அதிக தரமுள்ள உபகரணங்களை வழங்கக் கூடிய பட்சத்தில் BOE நிறுவனத்திடம் இருந்து டிஸ்ப்ளே ஸ்கிரீன்களை ஆப்பிள் நிறுவனம் வாங்குவது ஆப்பிள் நிறுவனம் மற்றும் சீனாவுடன் நட்புறவை மேம்படுத்த வழி செய்யும். சீனாவின் BOE நிறுவனம் பீஜிங் நகர அரசு சார்ந்தது என்பதோடு அதன் பெரிய பங்குதாரர்களாக மாநிலம் இணைந்த நிறுவனங்கள் இருக்கின்றன. #Apple #iPhoneX

    புகைப்படம் நன்றி: PIXABAY
    Next Story
    ×