search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இனி அந்த மாதிரிலாம் பண்ணக்கூடாது.. வாட்ஸ்அப் பயனர்களுக்கு செக் வைத்த கூகுள்
    X

    இனி அந்த மாதிரிலாம் பண்ணக்கூடாது.. வாட்ஸ்அப் பயனர்களுக்கு செக் வைத்த கூகுள்

    • கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
    • விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் பேக்கப் செய்வது குறித்து கூகுள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரி பேக்கப் தகவல்கள் அனைத்தும் கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் கட்டுப்பாடு விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவல் கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய கட்டுப்பாட்டு விதிகளில் இருந்து தப்பிக்க, பயனர்கள் தங்களின் ஃபைல் சைஸ் அளவை குறைக்கவோ அல்லது கூடுதல் ஸ்டோரேஜை வாங்கிக் கொள்ளலாம் என்று கூகுள் தெரிவித்து உள்ளது. தற்போது வரை கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 15 ஜி.பி. வரையிலான தரவுகளை இலவசமாக வைத்துக் கொள்ள முடியும்.

    பேக்கப்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் ஸ்டோரேஜை நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு கூகுள் வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் இந்த வழிமுறையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

    "ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பேக்கப்களை செயல்படுத்த விரும்பினால், தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்களுடன் 15 ஜி.பி. வரையிலான ஸ்டோரேஜ் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. இது கூகுள் டிரைவ், ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் போன்ற மொபைல் தளங்களில் பகிரப்படுவதை விட மும்மடங்கு அதிகம் ஆகும்."

    "பயனரின் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்-இல் ஸ்டோரேஜ் இருக்கும் வரை ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பேக்கப்கள் தொடர்ந்து வேலை செய்யும். ஸ்டோரேஜ் அளவை நெருங்கும் பட்சத்தில், தொடர்ந்து பேக்கப் சேவையை பெற ஸ்டோரேஜை அதிகப்படுத்த வேண்டும்," என்று கூகுள் வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய மாற்றத்தின் படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அமலுக்கு கொண்டுவரப்படுகிறது. பிறகு அடுத்தாண்டு துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் அனைவருக்கும் இந்த அம்சம் அமலுக்கு வரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×