search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ஜூன் 5-இல் சிறப்பு நிகழ்ச்சி நடத்தும் ஆப்பிள் - எதற்கு தெரியுமா?
    X

    ஜூன் 5-இல் சிறப்பு நிகழ்ச்சி நடத்தும் ஆப்பிள் - எதற்கு தெரியுமா?

    • ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இல் இயங்கும் xrOS சார்ந்த அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியாகலாம்.
    • ஜூன் மாத வாக்கில் ஆப்பிள் AR/VR ஹெட்செட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

    ஆப்பிள் நிறுவனம் ஜூன் 5 ஆம் தேதி "சிறப்பு நிகழ்ச்சி" நடத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆப்பிள் WWDC 2023 டெவலப்பர் நிகழ்வின் அங்கமாக நடைபெற இருக்கிறது. 2023 ஆண்டிற்கான ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு ஜூன் 5 ஆம் தேதி துவங்கி ஜூன் 9 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு நிகழ்ச்சி குறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இல் இயங்கும் xrOS சார்ந்த அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த வரிசையில் ஆப்பிள் ஹெட்செட்டும் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் ஆப்பிள் AR/VR ஹெட்செட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் ரியாலிட்டி ப்ரோ ஹெட்செட் மிகவும் சக்திவாய்ந்த XR ஹெட்செட் ஆக இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் இதன் விலையும் பிரீமியம் பிரிவிலேயே நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த ஹெட்செட் 4K மைக்ரோ OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் சோனி, டூயல் பிராசஸர்கள் TSMC, 12 கேமராக்கள் மற்றும் வெளிப்புற பவர் சப்ளை வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்செட்டில் இருந்தபடி ஆக்மெண்டெட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி மோட்களிடையே ஸ்விட்ச் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஆப்பிள் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விலை 3 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×