என் மலர்

  அறிந்து கொள்ளுங்கள்

  இந்தியாவில் ஐபேட் உற்பத்தியை துவங்கும் ஆப்பிள்?
  X

  இந்தியாவில் ஐபேட் உற்பத்தியை துவங்கும் ஆப்பிள்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மாடல்கள் உற்பத்தி சீனா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகளவு நடைபெற்று வருகின்றன.
  • ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

  சாதனங்களை உற்பத்தி செய்ய சீனாவை சார்ந்து இருப்பதை படிப்படியாக குறைத்துக் கொள்ளும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஐபோன் மாடல்கள் உற்பத்தியை பெருமளவு இந்தியாவுக்கு மாற்றி இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன்களை போன்றே ஐபேட் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  மேலும் இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்து முடிக்க ஏராளமான தடைகளை ஆப்பிள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதில் மிக முக்கியமானது ஐபேட் மாடல்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப திறன்களை தயார்படுத்துவதும் ஆகும். அந்த வகையில், இதனை சாத்தியப்படுத்துவது பற்றி இதுவரை இறுதியான முடிவு எட்டப்படவில்லை.

  தனது சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றுவதில் ஆப்பிள் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்வதற்கான இடையூறுகளை சரி செய்த பின் ஐபேட் உற்பத்தி இங்கு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

  ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 2017 முதல் தனது சாதனங்களின் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வந்தது. பின் மெல்ல உற்பத்தி பணிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது. அந்த வரிசையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்கள் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  Next Story
  ×