search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    12 ஜி.பி. ரேம் கொண்ட புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    12 ஜி.பி. ரேம் கொண்ட புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
    • மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.55 இன்ச் FHD+ 120Hz pOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ G84 5ஜி மாடல் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP ஆட்டோஃபோக்கஸ் அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள அல்ட்ரா வைடு கேமராவே டெப்த் சென்சார், மேக்ரோ ஆப்ஷனை வழங்குகிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ G84 5ஜி மாடல் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோ G84 5ஜி அம்சங்கள்:

    6.55 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ pOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    12 ஜி.பி. LPDDR4x ரேம்

    256 ஜி.பி. UFS 2.2 ஸ்டோரேஜ்

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் மை யு.எக்ஸ்.

    50MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு / டெப்த் கேமரா / மேக்ரோ ஆப்ஷன்

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டால்பி அட்மோஸ், டூயல் மைக்ரோபோன்

    வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    30 வாட் டர்போ சார்ஜிங் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம், 256 ஜிபி. மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 8-ம் தேதி துவங்குகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    Next Story
    ×