search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    550 கிமீ ரேன்ஜ் வழங்கும் மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார்.. எப்போ வெளியாகுது தெரியுமா?
    X

    550 கிமீ ரேன்ஜ் வழங்கும் மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார்.. எப்போ வெளியாகுது தெரியுமா?

    • எங்களின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஒரு எஸ்.யு.வி. மாடல்.
    • 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும்.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் eVX என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாருதி சுசுகி eVX மாடல், டொயோட்டா பிராண்டிங்கிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதோடு இந்த மாடல் வெளிநாட்டு சந்தைகளிலும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் வெளியீடு பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், 2025 நிதியாண்டு வாக்கில் மாருதி சுசுகி eVX மாடல் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    அதன்படி புதிய மாருதி சுசுகி eVX மாடல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இதன் விலை விவரங்கள் 2025 துவக்கத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    "எங்களின் முதல் எலெக்ட்ரிக் வாகனம், ஒரு எஸ்.யு.வி. மாடல் அடுத்த நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும். தற்போது ஹன்சல்பூரில் உள்ள ஆலையில் மூன்று பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய தனி பிரிவு உருவாக்கப்பட இருக்கிறது," என மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகுல் பாரதி தெரிவித்து இருக்கிறார்.

    "எங்களின் எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் கார் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இது அதிக அம்சங்கள் நிறைந்த எஸ்.யு.வி.யாக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் கார் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    Next Story
    ×