search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இந்தியாவில் பிக்சல் போன் உற்பத்தி.. கூகுளின் புதிய அப்டேட்
    X

    இந்தியாவில் பிக்சல் போன் உற்பத்தி.. கூகுளின் புதிய அப்டேட்

    • பிக்சல் பிராண்டிங்கில் முதல் ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
    • முதற்கட்டமாக பிக்சல் 8 மாடல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் பிக்சல் 8 யூனிட்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    இம்மாத துவக்கத்தில் கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் கூகுள் நிறுவனத்தின் டென்சார் G3 சிப் மற்றும் டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்படுகிறது. இத்துடன் இரட்டை பிரைமரி கேமரா சென்சார்கள் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் 72 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகின்றன.

    பிக்சல் பிராண்டிங்கில் முதல் ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்வில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 8 மாடல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    ஏற்கனவே சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் ஸ்மார்ட்போன் யூனிட்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் புதிய நிறுவனமாக இணைய இருக்கிறது.

    இந்திய உற்பத்தி காரணமாக பிக்சல் ஸ்மார்ட்போன் விலை இந்திய சந்தையில் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், இது பற்றி தற்போதைக்கு எந்த தகவலும் வெளியாகவில்லை.

    Next Story
    ×