என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்
![பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் அறிமுகம் செய்த சாம்சங் - என்ன விலை? பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் அறிமுகம் செய்த சாம்சங் - என்ன விலை?](https://media.maalaimalar.com/h-upload/2024/05/03/2141475-samsung-galaxy-s24.webp)
பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் அறிமுகம் செய்த சாம்சங் - என்ன விலை?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
- ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 2400 பிராசஸர், 6.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி S24 மாடலின் புதிய 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 999 ஆகும்.
கேலக்ஸி S24 அம்சங்கள்:
6.2 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
1-120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பிரைட்னஸ்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு
சாம்சங் எக்சைனோஸ் 2400 பிராசஸர்
எக்ஸ்-க்ளிப்ஸ் 940 GPU
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி./ 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யு.ஐ. 6.1
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS
12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா
10MP டெலிபோட்டோ லென்ஸ், OIS
12MP செல்ஃபி கேமரா
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)