என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    கேலக்ஸி S23 FE வெளியீடு.. அப்டேட் கொடுத்த சாம்சங் அதிகாரி
    X

    கேலக்ஸி S23 FE வெளியீடு.. அப்டேட் கொடுத்த சாம்சங் அதிகாரி

    • முந்தைய தகவல்களில் சாம்சங் நிறுவனம் FE எடிஷன் மாடல்களை ரத்து செய்து விட்டதாக கூறப்பட்டது.
    • கேலக்ஸி S23 FE மாடலில் 6.4 இன்ச் S-AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன் வழங்கப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்காவுக்கான சாம்சங் மொபைல் பிரிவு துணை தலைவர் ஜஸ்டின் ஹூம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கேலக்ஸி A54 5ஜி மற்றும் கேலக்ஸி S23 இடையே உள்ள இடைவெளி பற்றி பேசி இருக்கிறார். அப்போது இரு சீரிஸ்-க்கும் இடையில் தான் FE எடிஷன் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று பதில் அளித்தார்.

    மேலும் கேலக்ஸி S23 FE மாடல் வெளியீடு பற்றி மறைமுகமாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 FE மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது ஓரளவுக்கு தெரியவந்துவிட்டது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது FE எடிஷன் மாடல்களை ரத்து செய்து விட்டதாக கூறப்பட்டது.

    இதுவரை வெளியான தகவல்களில் கேலக்ஸி S23 FE மாடல் உலகின் பல்வேறு நாடுகளில் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அதன்படி இந்த காலாண்டிலேயே புதிய கேலக்ஸி S23 FE மாடல் அறிமுகம் செய்யப்படலாம். மற்ற நாடுகளில் மீதமிருக்கும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி S23 FE மாடலில் 6.4 இன்ச் S-AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் 32MP செல்பி கேமரா, OIS, 50MP பிரைமரி கேமரா, எக்சைனோஸ் 2200 பிராசஸர், 6 ஜிபி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படலாம்.

    Photo Courtesy: SmartPrix / OnLeaks

    Next Story
    ×