search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் - எந்த மாடல் தெரியுமா?
    X

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் - எந்த மாடல் தெரியுமா?

    • சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • புது ஆண்ட்ராய்டு அப்டேட் உடன் நவம்பர் மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்பட்டு வருகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 ஸ்டேபில் அப்டேட்-ஐ வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் புது ஆண்ட்ராய்டு அப்டேட் பெற்று இருக்கும் ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி M42 5ஜி மாடல் உள்ளது. இந்தியாவில் இந்த அப்டேட் SM-M426B எனும் மாடல் கோட் பெற்று இருக்கிறது. இதன் ஃபர்ம்வேர் வெர்ஷன் M426BXXU3CVK5 ஆகும்.

    புது அப்டேட் ஒன் யுஐ 5.0 நன்மைகளுடன், நவம்பர் 2022 மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி பேட்ச் உள்ளிட்டவைகளையும் பெற்று இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M42 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோர் இந்த அபேடேட்டை இதுவரை பெறவில்லை எனில், ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் மெனு சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.

    அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M42 5ஜி மாடலில் 6.6 இன்ச் சூப்பர் AMOLED, இன்ஃபினிட்டி யு-கட் டிஸ்ப்ளே, HD+ 720x1600 பிக்சல் ரெசல்யூஷன், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP டெப்த் கேமரா, 5MP லென்ஸ், 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி M42 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், நாக்ஸ் செக்யுரிட்டி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, வைபை, ஜிபிஎஸ், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், ஆன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி M42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிசம் டாட் பிளாக் மற்றும் ப்ரிசம் டாட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×