என் மலர்
மொபைல்ஸ்

ஒன்றல்ல மூன்று ஸ்மார்ட்போன்கள் - சாம்சங்கின் அதிரடி திட்டம்
- சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- புது ஸ்மார்ட்போன் விவரங்கள் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M23 5ஜி ஸ்மார்ட்போன் சமீபத்தில் தான் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி A04 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருந்தது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி A04e மாடலும் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
டிப்ஸ்டரான சுதான்ஷூ அம்போர் SM-M236B/DS, SM-A045F/DS மற்றும் SM-A042F/DS மாடல் நம்பர் கொண்ட மாடல்கள் சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்து இருக்கிறார். இந்த மாடல் நம்பர்கள் கேலக்ஸி M23 5ஜி, கேலக்ஸி A04 மற்றும் கேலக்ஸி A04e பெயர்களில் விற்பனைக்கு வரலாம். மூன்று மாடல்களில் இரு ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M23 5ஜி மாடலில் 6.6 இன்ச் LCD FHD+ 120Hz ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ 4.1, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
கேலக்ஸி A04e மாடலில் 6.5 இன்ச் PLS LCD ஸ்கிரீன், HD+ ரெசல்யூஷன், 5MP செல்பி கேமரா, ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், ஒன் யுஐ கோர் 4.1, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது.
கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்ப்ளே, 5MP செல்பி கேமரா, ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1, 5000 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.






