search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்
    X

    ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • விலை மற்றும் அம்சங்கள் அடிப்படையில் இந்த மாடல் கேலக்ஸி F சீரிசில் எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும்.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்தி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ, இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மற்ற குறைந்த விலை கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை போன்றே இந்த மாடலிலும் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.

    சாம்சங் கேலக்ஸி F04 அம்சங்கள்:

    6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்

    IMG PowerVR GE8320 GPU

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ

    டூயல் சிம் ஸ்லாட்

    13MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    2MP டெப்த் சென்சார்

    5MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    15 வாட் ஃபாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன் ஜேட் பர்பில் மற்றும் ஒபல் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜனவரி 12 ஆம் தேதி கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்க இருக்கிறது. அறிமுக சலுகையாக சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரத்து 499 விலையில் கிடைக்கும்.

    இத்துடன் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1000 தள்ளுபடி, விற்பனை துவங்கும் முதல் நாளில் ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    Next Story
    ×