என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விரைவில் இந்தியா வரும் கேலக்ஸி F04 - அசத்தல் டீசர் வெளியீடு!
    X

    விரைவில் இந்தியா வரும் கேலக்ஸி F04 - அசத்தல் டீசர் வெளியீடு!

    • சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.
    • புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு வித நிறங்கள் மற்றும் கிளாசி டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    சாம்சங் நிறுவனம் புது எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனின் வெளியீடு ஜனவரி 04 ஆம் தேதி நடைபெறும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ. 8 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றும் டீசரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஸ்கிரீன், மீடியாடெக் P35 பிராஸசஸர், டூயல் கேமரா சென்சார்கள், 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை கூடுதல் விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலிஷ் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி பேக்கப் மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன்யுஐ கொண்டிருக்கும் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன் இரண்டு ஒஎஸ் அப்டேட்களை பெறும். இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. கேலக்ஸி F சீரிசில் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக புதிய கேலக்ஸி F04 இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    முந்தைய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ், 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×