என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஆஸ்டன் மார்டின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்... ரியல்மியின் சூப்பர் அறிவிப்பு..!
    X

    ஆஸ்டன் மார்டின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்... ரியல்மியின் சூப்பர் அறிவிப்பு..!

    • புதிய ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல், பாரம்பரிய F1 அணியின் சின்னமான பச்சை நிறத்தில் உள்ளது.
    • இத்துடன் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

    ரியல்மி GT 8 ப்ரோ இந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போனாக உள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் புகைப்படங்கள் எடுக்க Ricoh GR இமேஜிங் ஆதரவுடன் வரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இப்போது ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்டன் மார்ட்டின் F1 என்று அழைக்கப்பட இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் வருகிற 10ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    புதிய ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல், பாரம்பரிய F1 அணியின் சின்னமான பச்சை நிறத்தில் உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்திலும் நிறுவனத்தின் பிரான்டிங் தெரியும். ரியல்மி GT8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல் சிறப்பு பேக்கேஜிங் மற்றும் அக்சஸரீக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் பிரத்யேக தீம்கள், வால்பேப்பர் மற்றும் ஐகான்களை கொண்டிருக்கும்.

    சிறப்பு வடிவமைப்பை தவிர ரியல்மி GT 8 Pro ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய கேமராக்களுடன் வருகிறது. நீங்கள் பின்புற கேமரா தொகுதியை மாற்றி வேறு ஒன்றிற்கு மாற்றலாம். இது சதுரம், வட்டம் மற்றும் "ரோபோ" பாணியில் மற்றும் வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது.

    வடிவமைப்பு மற்றும் அம்சங்களைத் தவிர, ஹார்டுவேர் பெரும்பாலும் ரியல்மி GT 8 ப்ரோவின் வழக்கமான மாடலைப் போலவே இருக்கும். இது 6.79-இன்ச் QHD+ (1,440×3,136 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 7,000 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி UI 7.0 உடன் இயங்குகிறது.



    மேலும், இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரியல்மி GT 7 ப்ரோ மாடலில் உள்ள 5,800mAh பேட்டரியில் இருந்து ஒரு பெரிய அப்டேட் ஆகும். இத்துடன் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

    புகைப்படங்கள் எடுக்க ரியல்மி GT 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, x ஆப்டிகல் ஜூம் மற்றும் 6x லாஸ்லெஸ் ஜூம் கொண்ட 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 50MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா ஆகியவை உள்ளன.

    Next Story
    ×