என் மலர்

  மொபைல்ஸ்

  இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 11R விவரங்கள்
  X

  இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 11R விவரங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே புது ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

  ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11R எனும் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களும் தொடர்ச்சியாக லீக் ஆகி வந்தன. அந்த வரிசையில், தற்போது ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் புது புகைப்படங்கள் லீக் ஆகி இருக்கின்றன.

  அதன்படி புதிய ஒன்பிளஸ் 11R ஸ்மாரட்போனில் கர்வ்டு எட்ஜ் கொண்ட ஸ்கிரீன், மத்தியில் பன்ச் ஹோல் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் 1220 பிக்சல் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, OIS, IR பிளாஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

  2022 ஆண்டின் அரையாண்டு வாக்கில் தான் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மிட் ரேன்ஜ் மற்றும் பிரீமியம் பரிவுகளுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டது. ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க ஃபிளாக்ஷிப் மாடல் என்பதால், ஒன்பிளஸ் 11R மாடல் விலை சற்றே அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். 2023 மாடல்களில் ப்ரோ பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று ஒன்பிளஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

  அந்த வகையில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் மாடலை சார்ந்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒப்போ மாடலில் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், IMX890 சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

  ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R மாடலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முதற்கட்டமாக ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் சர்வதேச வெளியீடு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

  Photo Courtesy: Twitter | heyitsyogesh

  Next Story
  ×