என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    Oppo K14x | குறைந்த விலையில் புது வெர்ஷன் அறிமுகம் செய்த ஒப்போ
    X

    Oppo K14x | குறைந்த விலையில் புது வெர்ஷன் அறிமுகம் செய்த ஒப்போ

    இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஒப்போ நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த K14x 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷனை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரு வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், ஒப்ப K14x 5ஜி ஸ்மார்ட்போனின் குறைந்த விலை எடிஷனாக புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ K14x 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் நடைபெறுகிறது.

    அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 750 உடனடி தள்ளுபடி மற்றும் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனும் மற்ற வெர்ஷன்களை போன்றே ஐசி புளூ மற்றும் ப்ரிசம் வயலெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

    ஒப்போ K14x 5ஜி அம்சங்கள்:

    6.75 இன்ச் 1604x720 பிக்சல் HD+ ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர்

    ARM மாலி-G57 MC2 GPU

    4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

    4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர் ஓ.எஸ். 16

    50MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் சென்சார்

    5MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

    6500mAh பேட்டரி

    45 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    Next Story
    ×