Foldable iPhone | கிட்னி ரெடி பண்ணிடுங்க! ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் விலை விவரங்கள்

விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வந்தன.அல்ட்ரா மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது.
Foldable iPhone | கிட்னி ரெடி பண்ணிடுங்க! ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் விலை விவரங்கள்
Published on

ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுபற்றி ஆப்பிள் தரப்பில் வழக்கம் போல எந்த தகவலும் வழங்கப்படாமல் உள்ளது. இதுவரை மடிக்கக்கூடிய ஐபோனின் ரென்டர்கள், கான்செப்ட் டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வந்தன.

இந்த நிலையில், மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய புதிய விவரங்கள் லீக் ஆகியுள்ளது. சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஐபோன் மாடலுக்கு `ஐபோன் அல்ட்ரா' என பெயர் சூட்ட இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இது ஆப்பிள் தற்போது விற்பனை செய்து வரும் டாப் எண்ட் ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடல்களின் மேல் நிலைநிறுத்தப்படும்.

அல்ட்ரா சீரிசில் டாப் எண்ட் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ், மேக்புக் என இதர சாதனங்களிலும் அல்ட்ரா மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இவை அந்தந்த சாதனங்களில் அதிக அம்சங்களுடன், விலை உயர்ந்த டாப் எண்ட் மாடலாக இருக்கும். புதிய ஐபோன்களின் விலை குறித்த தகவல்கள் தெளிவற்றதாகவே உள்ளன. எனினும், மடிக்கக்கூடிய ஐபோன்கள் சீனாவில் 10,000 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1.33 லட்சம்) வரை தொடங்கலாம்.

மடிக்கக்கூடிய ஐபோன்களின் டாப் எண்ட் மாடல்கள் விலை 20,000 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2.6) லட்சம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. விலை அடிப்படையில் பார்க்கும் போது, என்ட்ரி லெவல் மற்றும் டாப் எண்ட் மாடல்களின் அம்சங்களில் அதிக இடைவெளி இருக்கும். ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய ஐபோனை 2,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1.8 லட்சம்) விலையில் விற்பனைக்கு கொண்டு வரும் என்று கூறப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com