என் மலர்
மொபைல்ஸ்

பட்ஜெட் விலையில் இரண்டு நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்
- ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
- இரண்டு புதிய நார்டு சீரிஸ் மாடல்களிலும் 80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் நார்டு CE3 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் 1.5K 120Hz AMOLED ஸ்கிரீன், 1450 நிட்ஸ் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5X ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 13.1 கொண்டிருக்கிறது. இத்துடன் மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நார்டு 3 அம்சங்கள்:
6.74 இன்ச் 2772x1240 பிக்சல் ரெசல்யூஷன், AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் டிமென்சிட்டி 9000 பிராசஸர்
மாலி G710 10-கோர் GPU
12 ஜிபி, 16 ஜிபி LPDDR5X ரேம்
256 ஜிபி, 512 ஜிபி UFS 3.1 மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13
50MP பிரைமரி கேமரா, OIS
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் நார்டு CE3 அம்சங்கள்:
6.7 இன்ச் 2412x1080 பிக்சல் Full HD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 782ஜி பிராசஸர்
அட்ரினோ 642L GPU
8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ்
12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி, 512 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13
50MP பிரைமரி கேமரா, OIS
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் மிஸ்டி கிரீன் மற்றும் டெம்பஸ்ட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 15-ம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான் வலைதளம், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு CE3 ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது.






