search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2, 16 ஜிபி ரேமுடன் அறிமுகமான ஒன்பிளஸ் 11
    X

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2, 16 ஜிபி ரேமுடன் அறிமுகமான ஒன்பிளஸ் 11

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம்.
    • புது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.7 இன்ச் 2.75D flexible ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன் சப்போர்ட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் அல்ட்ரா-ஹை பெர்ஃபார்மன்ஸ் கிராஃபைட், ஹீட் டெசிபேஷன் முறையை மாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனில் வெப்பத்தை குறைக்கும் திறன் கிராஃபீனை விட 92 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் கருந்துளை சார்ந்த டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் எண்ட்லெஸ் பிளாக் மாடலில் நான்காம் தலைமுறை சில்க் கிலாஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது கிட்டத்தட்ட பட்டுக்கு நிகரான அனுபவத்தை வழங்கும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

    ஒன்பிளஸ் மற்றும் AAC கூட்டணியில் இந்த ஸ்மார்ட்போன் உலகின் முதல் பயோனிக் வைப்ரேடிங் மோட்டார் கொண்டிருக்கிறது. இது 600mm³ அதிக சத்தம் கொண்ட ஒரே ஆண்ட்ராய்டு மோட்டார் ஆகும். இதில் உள்ள ஃபுல்-ஃபேஸ் மேக்னடிக் சர்கியுட் தொழில்நுட்பம் ஒரே சமயத்தில் இரு வைப்ரேஷன்களை கண்டறிய முடியும். அதிக ஃபிரேம் ரேட் மற்றும் நேடிவ் இமேஜ் குவாலிட்டிக்காக பிரத்யேக கிராஃபிக்ஸ் என்ஜின் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

    ஒன்பிளஸ் 11 அம்சங்கள்:

    6.7 இன்ச் 3216x1440 பிக்சல் QHD+ 2.75D flexible curved AMOLED LTPO டிஸ்ப்ளே

    120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிலாஸ் விக்டஸ்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    12 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி UFS 4.0 மெமரி

    16 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி, 512 ஜிபி UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    48MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் விலை சீன சந்தையில் 3 ஆயிரத்து 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 095 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 4 ஆயிரத்து 899 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 58 ஆயிரத்து 905 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜனவரி 9 ஆம் தேதி துவங்குகிறது. இதன் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

    Next Story
    ×