என் மலர்
மொபைல்ஸ்

CES 2026-இல் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த மோட்டோரோலா..!
- கவர் ஸ்கிரீனில் 32MP செல்ஃபி கேமரா, மெயின் ஸ்கிரீனில் 20MP லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
- புதிய ரேசர் ஃபோல்டு மாடலில் AI சார்ந்த அம்சங்களும் உள்ளது.
நுகர்வோர் மின்னணு கண்காட்சி (CES) 2026 இல் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டது. இது மோட்டோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது, இது இரண்டாவது மடிக்கக்கூடிய மாடலாக ரேசர் ஃபிளிப் மாடலுடன் இணைகிறது.
மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு மாடலில் 8.1 இன்ச் உள்புற ஸ்கிரீன் மற்றும் 6.6 இன்ச் கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது மோட்டோ பென் அல்ட்ரா ஸ்டைலஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் AI அம்சங்களும் உள்ளன.
மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு அம்சங்கள்:
மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பான்டோன் பிளாக்னெட் புளூ மற்றும் பான்டோன் லில்லி ஒயிட் வண்ணங்களில் கிடைக்கும். வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது வளைந்த விளிம்புகள், ஹிஞ்ச் (கீல்) மற்றும் மோட்டோரோலாவின் தற்போதைய ஸ்மார்ட்போன் வடிவமைப்புகளை நெருக்கமாக ஒத்த பின்புற கேமரா பம்ப் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 8.1 இன்ச் LTPO உள்புற டிஸ்ப்ளே, 6.6 இன்ச் வெளிப்புற ஸ்கிரீனுடன் வருகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP சோனி பிரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டுள்ளது.
கவர் ஸ்கிரீனில் 32MP செல்ஃபி கேமரா, மெயின் ஸ்கிரீனில் 20MP லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரேசர் ஃபோல்டு மாடலில் AI சார்ந்த அம்சங்களும் உள்ளது. மோட்டோரோலா, ரேசர் ஃபோல்டு ஸ்டைலஸ் உள்ளீட்டிற்காக மோட்டோ பென் அல்ட்ரா சப்போர்ட் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு மாடலின் பேட்டரி, சிப்செட் மற்றும் பரிமாணங்கள் உள்ளிட்ட பிற விவரங்களை வெளியிடவில்லை. அதன் விலை மற்றும் விற்பனை விவரங்களும் ரகசியமாகவே உள்ளது.






