என் மலர்
மொபைல்ஸ்

வேற லெவலில் உருவாகும் ஃபோல்டபில் ஐபோன் - வெளியீடு எப்போ தெரியுமா?
- மடிக்கக்கூடிய சாதனங்கள் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்குவது பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
- மடிக்கக்கூடிய ஐபோன் மாடலில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும் இது ஐபோன் ஃபோல்டு என்று அழைக்கப்படுகிறது.
சாம்சங், ஹூவாய், ஒப்போ மற்றும் சியோமி என பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் களமிறங்கி விட்டன. ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்த பிரிவில் புது மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
புதிய மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் "ஐபோன் ஃபோல்டு" பெயரில் அழைக்கப்படும் என்றும் இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் மேக்சேஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவைதவிர புதிய ஐபோன் ஃபோல்டு மாடலில் டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் எல்ஜி-யுடன் இணைந்து மிக மெல்லிய கவர் கிலாஸ் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி ஆப்பிளஅ நிறுவனம் சொந்த சிப் டிசைன் பிரிவில் தொடர்ந்து முதலீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கான சொந்த சிப்செட்களை டிசைன் செய்து வருகிறது. எனினும், 5ஜி கனெக்டிவிட்டியை வழங்க ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவன மோடெம்களை சார்ந்து இருக்கிறது. டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் ஆய்வாளர் ராஸ் யங் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2025 வரை அறிமுகமாகாது என தெரிவித்து இருந்தார்.
ஆப்பிள் நிறுவனம் தற்போது 20 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே வாங்குவது குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய மேக்புக் மாடல்களை ஆப்பிள் உருவாக்க நினைப்பதாகவே தெரிகிறது. மடிக்கப்பட்ட நிலையிலும், முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் பயன்படுத்தக்கூடிய மேக்புக் மாடல்கள் 2026 அல்லது 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: iOS Beta News/YouTube