search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மான்ஸ்டர் ஆரஞ்சு நிறத்தில் அறிமுகமான ஐகூ 7
    X
    மான்ஸ்டர் ஆரஞ்சு நிறத்தில் அறிமுகமான ஐகூ 7

    மான்ஸ்டர் ஆரஞ்சு நிறத்தில் அறிமுகமான ஐகூ 7

    ஐகூ நிறுவனத்தின் புதிய ஐகூ 7 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் புது நிறத்தில் அறிமுகமாகி இருக்கிறது.
    ஐகூ நிறுவனம் தனது ஐகூ 7 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் சாலிட் ஐஸ் புளூ மற்றும் ஸ்டாம் பிளாக் நிறங்களில் மட்டுமே அறிமுகமானது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மான்ஸ்டர் ஆரஞ்சு நிற வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

    ஐகூ 7 5ஜி மான்ஸ்டர் ஆரஞ்சு நிற வேரிண்ட் அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் ஜூலை 26 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 31,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ஐகூ 7 5ஜி மாடலில் 6.62 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 5ஜி SA/NSA, லிக்விட் கூலிங் சிஸ்டம், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ  டெப்த் சென்சார், 16 எம்பி பன்ச்-ஹோல் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4400 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஐகூ 7

    ஐகூ 7 அம்சங்கள்

    - 6.62 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10+, 120Hz டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், OIS
    - 13 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்பி மோனோ சென்சார், f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹை-பை, ஆடியோ
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4,400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 66 வாட் சூப்பர்பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங்
    Next Story
    ×