என் மலர்
கணினி

#MacBookNeo மலிவு விலை மேக்புக் அறிமுகம் செய்த ஆப்பிள்!
சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் பரவலாக வெளியான தகவல்கள் உண்மையாக்கும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் மேக்புக் மாடலை அறிமுகப்படுத்தியது. மேக் சாதனங்களில் என்ட்ரி லெவல் மாடலாக முற்றிலும் புதிய மேக்புக் நியோ நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
13-இன்ச் அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய மேக்புக் நியோ மாடலில் ஆப்பிள் A18 ப்ரோ பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மாடல் முற்றிலும் புதிய ஹார்டுவேர் டிசைன், நிற ஆப்ஷன்கள் மற்றும் மென்பொருள் உள்ளீடுகளுடன் வருகிறது. மேக்புக் நியோ மாடல் அலுமினியம் கேசிங் மற்றும் மென்மையான, வட்ட வடிவ கார்னர்களை கொண்டிருக்கிறது. இதன் எடை 1.23 கிலோ ஆகும். இது அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற சாதனமாக இதை மாற்றுகிறது.
இந்த சாதனம்: சில்வர், பிளஷ், சிட்ரஸ் மற்றும் இண்டிகோ என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. மேலும், இதில் 13-இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 1 பில்லியன் நிறங்களுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை இந்த மாடலில் இரு யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள், ஒற்றை 3.5mm ஹெட்போன் ஜாக், வைபை 6E மற்றும் ப்ளூடூத் 6 வழங்கப்பட்டுள்ளது.
மேக்புக் நியோ அம்சங்கள்:
13-இன்ச் 2408x1506 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
8 ஜி.பி. ரேம்
256 ஜி.பி. / 512 ஜி.பி. SSD ஸ்டோரேஜ்
ஆப்பிள் A18 ப்ரோ சிப்
மேக் ஓ.எஸ்.
மேஜிக் கீபோர்டு, டச் ஐ.டி., ஃபோர்ஸ் டச் டிராக்பேட்
1080 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, 1080 பிக்சல் ஹெச்.டி. வீடியோ ரெக்கார்டிங்
டூயல் ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட்
யு.எஸ்.பி. 3 போர்ட் (ஒன்று)
யு.எஸ்.பி. 2 போர்ட் (ஒன்று)
வை-பை 6E, ப்ளூடூத் 6
36.5 வாட்-ஹவர் லித்தியம் பாலிமர் பேட்டரி
விலை விவரங்கள்:
ஆப்பிள் மேக்புக் நியோ 256 ஜி.பி. மாடல் ரூ. 69,900
ஆப்பிள் மேக்புக் நியோ 512 ஜி.பி. மாடல் ரூ. 79,900
புதிய மேக்புக் நியோ மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் விற்பனை மார்ச் 11-ஆம் தேதி தொடங்குகிறது.






