search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர் சேவை"

    • 5 மணி நேரம் வரை பயணித்து போனால்தான் பெங்களூருவை அடைய முடியும்.
    • தனியார் நிறுவனம் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

    ஓசூர்,

    தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவிற்கு செல்லும் மக்களின் முக்கிய தலைவலி போக்குவரத்து நெரிசல்.

    ஓசூர் வழியாக சாலையில் சென்றால் 3 முதல் 5 மணி நேரம் வரை பயணித்து போனால்தான் பெங்களூருவை அடைய முடியும். பெங்களுருவில் இருந்து விமானம் ஏற வேண்டும் என்றால் கூடுதலாக 5 மணிநேரம் முன்னரே புறப்பட வேண்டும்.

    ஆனால் ஹெலிகாப்டர் மூலம் 20 நிமிடங்களில் போக முடியும் என்றால் மகிழ்ச்சி தானே? ஒரு தனியார் நிறுவனம் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

    ஓசூரில் இருந்து பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் இந்த சேவை மற்றும் வரும் பயணிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை, புனே மற்றும் ஷீரடி இடையே முதல் ஹெலிகாப்டர் சேவைகளை தொடங்கிய இந்த நிறுவனம் தற்போது கர்நாடகா மாநிலத்தில் கூர்க், ஹம்பி மற்றும் கபினி மற்றும் கோவாவிற்கு விரிவுபடுத்தியது.

    தற்போது பெங்களூ ருவிற்கு வந்துள்ளது. முதல் கட்டமாக தற்போது காலையில் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து, ஓசூர் நகரத்திற்கும் மாலையில் ஓசூரில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கும் சேவைகள் தொடங்கப்படுகிறது.

    சாலையில் 3 மணிநேரம் பயணிக்க வேண்டிய தூரத்தை இந்த ஹெலிகாப்டர் சேவையின் மூலம் 20 நிமிடங்களுக்குள் அடையலாம்.

    வணிக ரீதியில் பயணத்தில் ஈடுபடும் ஒருவருக்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.பயணத்தில் பல மணிநேரங்களை இது மிச்சப்படுத்தும்.மேலும் குறைந்த செலவில் ஹெலிகாப்டரில் பயணிக்க விரும்பும் மக்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

    இந்த ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஒரு நபருக்கு 6000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ×