search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹஜ் கமிட்டி"

    • மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் நியமனம் செய்யப்பட்டார்.
    • அரசு நிறைவேற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் நகராட்சி 31-வது வார்டு கவுன்சிலர் எம்.முகம்மது ஜஹாங்கீர். முதுகலை பட்டதாரியான இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து கவுன்சிலர் முகம்மது ஜஹாங்கீர் கூறிய தாவது:-

    தமிழக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநில ஹஜ் கமிட்டி உறுப்பி னராக என்னை நியமனம் செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக் கும், நான் சார்ந்துள்ள தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி தொடர்பு டைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், இதற்காக பரிந்துரைத்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக பதவி ஏற்றவு டன் மாநில அளவில் ஹஜ் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்துதர பாடு படுவேன். இந்தியாவில் முன்மாதிரியான திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், சிறுபான்மையினரின் நலனை பேண அவரது உரிமைகளை காக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    ஹஜ் பயணிகள் சிரமம் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள சலுகைகளை செய்து வருகிறார். மத்திய அரசு ஹஜ் மானியத்தை ரத்து செய்தாலும் நமது தமிழக அரசு மானியத்தை வழங்கி வருகிறது. இதனால் பல ஏழை முஸ்லிம்களின் ஹஜ் பயண கனவை தி.மு.க. அரசு நிறைவேற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது

    சிறுபான்மையினர் நலனுக்காக இன்னும் பல திட்டங்களை கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அனைத்து தரப்பினரும் முன்னேற்றம் அடையும் வகையில் மதசார்பற்ற சமூக நல்லிணக்கமான சமத்துவ ஆட்சியை அவர் தந்து கொண்டிருக்கிறார். அதேபோல் என்னை கவுன்சிலராக தேர்ந்தெடுத்த 31-வது வார்டு மக்களின் கோரிக்ககைளையும் முழு வதுமாக நிறைவேற்ற நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் மற்றும் நகராட்சி பணியா ளர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

    குறுகிய காலத்திற்குள் ரேசன் கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதிகளை மேம்படுத்தி உள்ளேன். விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்ற நகர்மன்றத்தில் வலியுறுத்தி வருகிறேன். எனது மக்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் என வார்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளை ஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×