search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட்சிட்டி"

    • மதுரையில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.
    • பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் பெரியார் பேரங்காடி கட்டுமான பணிகளை மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் பெரியார் பேருந்து நிலையம், சுற்றுலா தகவல் மையம், ஜான்சிராணி பூங்கா, குன்னத்தூர் சத்திரம் ஆகியவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் பெரியார் பேருந்து நிலையம் அருகில் ரூ.119.56 கோடி மதிப்பீட்டில் பேரங்காடி கட்டுமான பணிகள், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ரூ.44.20 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பெரியார் பேருந்துநிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரங்காடி கட்டுமான பணிகள், அருகில் உள்ள பயணிகள் சுற்றுலா தகவல் மையத்தில் மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள ஜான்சி ராணி பூங்கா வணிக வளாகம் மையம், குன்னத்தூர் சத்திரம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் ஆணையாளர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலருக்கு உத்தர விட்டார்.

    முன்னதாக ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கர்டர்பாலம் பகுதியில் உள்ள கழிவு நீரேற்றுநிலையம், மேலப்பொன்னகரம் 8-வது தெருவில் பகுதியில் உள்ள உந்து கழிவுநீரேற்று நிலையம் மற்றும் பொன்மேனி பகுதியில் உள்ள உபகழிவு நீரேற்று நிலையம் ஆகிய கழிவுநீரேற்று நிலையங்க ளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் லட்சுமணன், செயற் பொறியாளர்கள் பாக்கியலட்சுமி, பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் ேசகர், மக்கள்தொடா;பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் ஆறுமுகம், ஆரோக்கிய சேவியர், தியாகராஜன், கந்தப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×