search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகோ பேச்சு"

    • தமிழ்நாட்டில் இந்தியை ஒருபோதும் நுழைய விட மாட்டோம் என்று மதுரையில் வைகோ பேசினார்.
    • தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு மோசமான ஒரு கவர்னரை இதுவரை கண்டதில்லை.

    மதுரை

    மதுரையில் மொழிப் போர் தியாகிகளை போற்றி டும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ம.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பூமிநாதன் எம். எல். ஏ. தலைமை தாங்கி னார். மாநில தொண்ட ரணி செயலாளர் பாஸ்கர சேது பதி முன்னிலை வைத்தார்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை யாற்றினார். அவர் பேசிய தாவது-

    தமிழ்நாடு தான் எங்கள் நாடு என்று ஓங்கி உரத்த குரலில் பேசிய பெரியார், தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த தியாக சீலர்கள் என தமிழ்நாட்டில் பல்வேறு தியாகங்களை செய்து மொழியையும், இனத்தையும் காத்து நிற்பவர்கள் நம் தலைவர்கள். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டும் என்று நினைத்தால் நாடு துண்டாகும் என்று அன்றைக்கே எச்சரித்தார் தந்தை பெரியார். 1963-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இந்தி தான் ஆட்சி மொழி எனக் கூறி ஆட்சி மொழி மசோதா கொண்டு வந்தபோது பேரறிஞர் அண்ணா தலைமையில் அந்த அரசியல் சட்ட நகலுக்கு தீ வைத்து கொளுத்தும் போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த போராட்டத்திற்கு தலைவர் கலைஞர் என்னை வழியனுப்பி வைத்தார். நானும் போராட்டத்தில் ஈடுபட்டேன். அன்றைக்கு தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு தொடர்ந்து தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இப்போதும் மத்திய ஆட்சியாளர்களாலும், சனாதன சக்திகளாலும் தமிழுக்கும் தமிழகத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. இந்துத்துவ அடிப்படை என்று கூறி நம்மை பிரிக்க பார்க்கிறார்கள். மோடியை போல மக்களை ஏமாற்றுபவர் நாட்டில் யாருமில்லை. இந்துத்துவா சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் விரட்டி அடிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

    தமிழ்நாட்டில் இருக்கின்ற கவர்னர் தமிழகம் என்கிறார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் தமிழ்நாடு என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார். தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு மோசமான ஒரு கவர்னரை இதுவரை கண்டதில்லை. தமிழ் மொழிக்காக உயிரைத் தந்த போராளிகளின் மீது ஆணையாக கூறுகிறோம் இந்துத்துவாவையும், இந்தியையும் தமிழ்நாட்டில் ஒருபோதும் நுழைய விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் சுப்பையா, மனோகரன், பசுபதி அம்மாள், கீரைத்துறை பாண்டியன், முனியசாமி, அன்னமுகமது, மகபூப்ஜான், தொண்டரணி அமைப்பாளர்கள் பச்ச முத்து, சண்முகவேல், ராஜா என்ற ராஜ்குமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    ×