search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் மாநகராட்சி"

    • வேலூர் மாநகராட்சி மீது பரபரப்பு புகார்
    • கலெக்டர் ஆபீசில் பொதுமக்கள் மனு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.வேலூர் மாநகராட்சி 32 -வது வார்டு கொணவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது;

    கொணவட்டம் விரிவு பகுதியான இந்திரா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு சாலைகள் கழிவுநீர் கால்வாய் சீரான குடிநீர் வசதி போதுமான மின்விளக்கு வசதி குப்பை தொட்டிகள் சுகாதார பராமரிப்பு வசதிகள் இல்லை.

    இது பற்றி பலமுறை மனு அளித்தும் நேரில் முறையிட்டும் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

    வேலூர் மாநகராட்சி நிர்வாகம் வரி வசூலில் காட்டும் வேகத்தை அடிப்படை வசதிகள் செய்வதிலும் அக்கறை காட்ட வேண்டும்.

    இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேலூர் மாநகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • அதிமுக கவுன்சிலர்கள் செல்போன் வெளிச்சத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அ.தி.மு.க கவுன்சிலர் கூறினர்.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் அசோக்குமார், துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கிராமங்கள்போல மாநகரப் பகுதியில் பகுதி சபா அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் 419 பகுதி சபா அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார். உடனடியாக கூட்டம் நிறைவடைந்தது.

    அப்போது அ.தி.மு.க கவுன்சிலர்கள் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    அங்கிருந்து மேயர் துணை மேயர் கமிஷனர் ஆகியோர் வெளியே சென்றனர். அதிமுக கவுன்சிலருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் சிலரும் பேசினர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிமுக கவுன்சிலர்கள் எழிலரசன், ரமேஷ், சரவணன், அஸ்மிதா, அமல நிருபா, அருணா விஜயகுமார், ராஜேஸ்வரி சோமு மற்றும் பாஜக கவுன்சிலர் சுமதி மனோகரன் ஆகியோர் கூட்ட அரங்கில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை உடனடியாக வெளியேற வேண்டுமென மாநகராட்சி ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

    அவர்களை தனது அறைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர்கள் கூட்டம் அரங்கில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் அதுவரை வெளியேற மாட்டோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து கூட்ட அரங்கில் இருந்த மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது.

    இதனால் அதிமுக கவுன்சிலர்கள் செல்போன் வெளிச்சத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    கூட்டத்தில் விளக்கம் கூட அளிக்காமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எந்த வகையில் நியாயம் என அ.தி.மு.க கவுன்சிலர் கூறினர்.

    • பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் ரூ.200 அன்பளிப்பு வழங்கப்படும்.
    • வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என வேலூர் மாநகராட்சி அறிவித்தது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது. இதனால் குப்பையை சாலைகளில் கொட்டுவது, காலி இடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதனை தடுக்க அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் காலிமனைகளில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.

    இந்நிலையில், வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன.

    தெருக்கள், கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையைக் கொட்டினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும்.

    அதேநேரம், குப்பையை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 அளிக்கப்படும் என வேலூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    ×