search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் போலீஸ் நிலையம்"

    காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வி‌ஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    அரக்கோணம் இஞ்சிபுத்தூர் அன்னை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சசிகலா (வயது 33). வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அவர் போலீசாரிடம், எனது கணவர் என்னை தொந்தரவு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சசிகலா திடீரெனத் தான் கையில் மறைத்து வந்திருந்த வி‌ஷத்தை எடுத்துக் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த போலீசாரும், சசிகலாவின் சகோதரரும் ஓடி வந்து வி‌ஷ பாட்டிலை தட்டி விட்டனர்.

    போலீசார், சசிகலா வைத்திருந்த மனுவை வாங்கி கொண்டனர். அவரை, அருகில் உள்ள பென்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    எனது கணவர் பெயர் குமார். கஸ்பாவில் வசிக்கிறார். நாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். அவருக்கு, குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மதுபானம் குடித்து விட்டு வந்து, என்னிடம் தகராறு செய்வார். நான் பல நாட்கள் பொறுமையாக இருந்தேன். எனினும் அவர் எல்லை மீறி பல தொந்தரவுகளை செய்தார். நான் எனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டேன். கணவரை பிரிந்து 6 மாதங்கள் ஆகின்றன. தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை மிரட்டுகிறார்.

    எனது பெற்றோரையும் அவர் தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும் அவரது நண்பர்களிடம் எனது செல்போன் எண்ணை கொடுத்து, ஆபாசமாக பேசுமாறு தூண்டி விடுகிறார். அவர்களும் ஆபாசமாக பேசுகிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்தால், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலாவின் கணவர் குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×