என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள் பொது ஏலம்"

    • கழிவுநிலையில் உள்ள வாகனங்களை 05.01.2023 அன்று காலை 11 மணி அளவில் பொது ஏலக்குழு தலைவர் மற்றும் ஏலக்குழு உறுப்பினர் முன்னிலையில் ஏலம் விடப்பட உள்ளது.
    • ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 03.01.2023 மாலை 3 மணி ஆகும்.

    தருமபுரி, 

    தருமபுரி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்கள் 05.01.2023 அன்று பொது ஏலம் விடப்பட உள்ளது.

    இதுகுறித்து தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்து ள்ளதாவது:-

    தருமபுரி வட்டார ப்போக்குவரத்து அலுவ லகத்தில் சிறைப்பிடிக்க ப்பட்டு உரிமைகோரப்படாத 32-வாகனங்களை போக்குவரத்து ஆணையர் கடிதத்தின்படி பொது ஏலத்தில் விட்டு அத்தொகை அரசுக் கணக்கில் வரவு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கழிவுநிலையில் உள்ள வாகனங்களை 05.01.2023 அன்று காலை 11 மணி அளவில் பொது ஏலக்குழு தலைவர் மற்றும் ஏலக்குழு உறுப்பினர் முன்னிலையில் ஏலம் விடப்பட உள்ளது.

    இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 22.12.2022-ம் தேதியிலிருந்து விண்ணப்பக் கட்டணம் ரூ.500- (விண்ணப்பத்துடன் வாகன விபரப் பட்டியல் தரப்படும்), தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தி, GST உரிம தக்கலை சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 03.01.2023 மாலை 3 மணி ஆகும்.

    தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 03.01.2023-ம் தேதி மாலை 5 மணிக்குள் அரசுக்கு சீலிடப்பட்டு அலுவலக வளாகத்தில் அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் (Tender Box) சேர்ப்பிக்க வேண்டும்.

    டேவணித் தொகை ரூ.10,000- வங்கி வரைவாக செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நேரங்களில் 22.12.2022 முதல் 03.01.2023 தேதி வரை உரிய அனுமதி பெற்று பார்வையிடலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 70 வாகனங்கள், 13-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.
    • 13.10.2022 - ம் தேதி காலை 7 மணிக்கு நேரில் பார்வையிடலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, மதுவிலக்குச் சட்டம் 14(4) படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 12 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 58 இருசக்கர வாகளங்கள் மொத்தம் 70 வாகனங்கள், 13-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.

    நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் முன்வைப்பு தொகையாக ரூபாய் 10,000-ம், 13.10.2022 - ம் தேதி காலை 8 மணிக்குள் ஏலம் நடைபெறவுள்ள இடத்தில் செலுத்த வேண்டும். முன்வைப்புத்தொகை செலுத்துவோர்ம ட்டுமே ஏலத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் 13.10.2022 - ம் தேதி காலை 7 மணிக்கு நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    நான்கு சக்கர வாக னத்திற்கு ஏலத்தொகைக்கு ஏற்ப 18 விழுக்காடு GST யும், இருசக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு ஏற்ப 12 விழுக்காடு GST யும் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலை பேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    ×