search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டார வளர்ச்சி அலுவலகம்"

    • கட்டிட பணிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்
    • அனைத்து பணி களையும் தரமானதாகவும், உறுதியானதாகவும் கட்ட வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட திட்ட மிடப்பட்டுள்ளது.

    ரூ.3.46 கோடி மதிப்பில் நடைபெற உள்ள இந்த பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா கோழிப்போர் விளை பழைய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்து பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பொது மக்களுக்கும் பயனுள்ள திட்டங்களை அறிவித்து, அது மக்களை சென்றடைய வேண்டு மென்ற நோக்கில் செயல் படுத்தி வருகிறார். மேலும் மக்களின் தேவைகளை அறிந்து புதிய அரசு அலுவலகங்கள். சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, தக்கலையில் இன்றையதினம் வட்டார வளர்ச்சி அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்க ப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு பேரூராட்சி க்குட்ட திருநந்திகரை பகுதி யில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று ரூ.1.46 கோடி மதிப்பில் கலைஞர் நவீன நகர்புற மயானம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிணந்தோடு பகுதியில் ரூ. 12 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    விலவூர் கோணம், வேங்கோடு குளத்தில் ரூ.37 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. சுருளகோடு ஊராட்சி பகுதி யில் வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.15.55 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்ப ட்டு உள்ளது.

    புதிய கட்டிட பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகள் என மொத்தம் ரூ.5.56 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகள் திறந்தும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பணி களையும் தரமானதாகவும், உறுதியானதாகவும் கட்ட வேண்டும். அவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர வேண்டு மெனவும் அறிவு றுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, அன்பு, முளகுமூடு பேரூராட்சி தலைவர்அனுஷா ஜோன், உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் ராணி, அருளானந்தம் ஜார்ஜ், ரமேஷ்பாபு, ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
    • ஒன்றிய குழு தலைவர் பேச்சுவார்த்தை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் வரதாரெட்டிபல்லி ஊராட்சியில் வரதாரெட்டிபல்லி, பண்டப்பல்லி, மோடிகுப்பம், வி.எஸ்.புரம், குப்பகொட்டுர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமானோர் 100 நாள் வேலைக்கு பதிவு செய்துள்ளனர்.

    கூலி வழங்க வில்லை

    இதில் சூழ்ச்சி முறையில் 100 நாள் பணி இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக 100க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பணிதள பொறுப்பாளரும் இல்லை எனவும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டில் பெயர்கள் பதிவு செய்ய முடியவில்லை எனவும் உடனடியாக தரவேண்டிய கூலியை தர வலியுறுத்தியும், பணிதள பொறுப்பாளரை நியமிக்க வலியுறுத்தியும் 100 நாள் பணிக்கு வருகை பதிவேடு பதிவு செய்ய வலியுறுத்தியும் நேற்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் இருந்தது விரைந்து வந்த குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் தமிழக முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கான கூலித்தொகை விடுவிக்கப்ப டவில்லை எனவும், உடனடியாக பணிதள பொறுப்பாளரை நியமிப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×