search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடநாட்டு தொழிலாளி"

    • 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்தை 94 நாட்களில் கடந்து வந்து சாதனை
    • காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை

    கன்னியாகுமரி, மே.25-

    மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் ராம் கண்டேகர் (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மெட்டல் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பெடல் இல்லாத சைக்கிளில் ஒற்றை காலால் மிதித்த படி உலக சாதனை பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி காஷ்மீர் மாநிலம் லே லடாக் பகுதியில் இருந்து பெடல் இல்லாத சைக்கிளில் ஒற்றை காலில் மிதித்தபடி தனது உலக சாதனை பயணத்தை தொடங்கினார்.

    அங்கிருந்து இமாச்சல பிரதேசம், அரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழ் நாட்டுக்கு இந்த மாத தொடக்கத்தில் வந்தடைந் தார்.

    பின்னர் அவர் ஓசூர், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், சுசீந்திரம், கொட்டாரம் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரை பகுதி யில் தனது உலக சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.

    இவர் மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்தை 94 நாட்களில் கடந்து வந்து சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க தாகும். இவர் இதற்கு முன்பு 28 நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சைக்கிள் பயணம் செய்து உள்ளார் என்று தெரிவித்தார்.

    இவரது சைக்கிள் பயணத்தை சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    ×