search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரிகள் இயக்கம்"

    8 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து கோவையில் நள்ளிரவு முதல் லாரிகள் ஓடத் தொடங்கியது. #LorryStrike
    கோவை:

    நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.

    போராட்டம் காரணமாக கோவையில் இருந்து வெளி மாவட்டம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பம்புசெட், கிரைண்டர் விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள், காய்கறிகள் தேக்கம் அடைந்தது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இன்று முதல் லாரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கோவையில் நள்ளிரவு முதல் லாரிகள் ஓடத் தொடங்கியது. சரக்குகளுடன் ஆங்காங்கே நின்று கொண்டு இருந்த லாரிகள் அனைத்தும் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டு சென்றது.

    போராட்டம் காரணமாக கடந்த 8 நாட்களாக தேங்கிய பம்புசெட், கிரைண்டர், விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தியாளர்கள் லாரிகளில் ஏற்றி செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைத்தனர். லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற நிலையில் கடந்த 8 நாட்களில் அதிகமான உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்ததால் சரக்குகளை ஏற்றி செல்ல லாரிகள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

    கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு வழக்கம் போல வரும் லாரிகள் நேற்று இரவு முதல் காய்கறிகளை ஏற்றி வந்தது. மேலும் இங்கு இருந்து கேரள மாநிலம், மற்றும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கும் அனுப்ப வேண்டிய காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பி வைத்தனர்.
    ×